நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்த பாடுபட்ட ராஜேஷ்குமாருக்கு பாராட்டு

ராஜேஷ்குமார் எம்.பி.க்கு நாமக்கல் நகராட்சி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதற்கு, நன்றி தெரிவித்து நாமக்கல் நகராட்சி சார்பில், ராஜேஷ்குமார் எம்.பிக்கு சால்வை அணிவித்தனர்.
நாமக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதற்கு, நகராட்சி சார்பில், தமிழக முதலமைச்சருக்கும், ராஜேஷ்குமார் எம்.பி.க்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையொட்டி, நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு, பெரும் முயற்சி எடுத்த, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமாருக்கு பல்வேறு தரப்பினரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி,துணை தலைவர் பூபதி, நாமக்கல் தெற்கு நகர திமுக செயலாளர் ராணாஆனந்த் உள்ளிட்டோர், ராஜேஷ்குமார் எம்.பி.யை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, நாமக்கல் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்திய தமிழக முதல்வருக்கும், ராஜேஷ்குமாருக்கும் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கவுதம், பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பொன் சித்தார்த், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu