பழங்குடியினர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Namakkal news- பழங்குடியினர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு (கோப்பு படம்)
Namakkal news, Namakkal news today- பழங்குடியினர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
2024-&2025 ஆம் கல்வி ஆண்டில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வுவாரியம் மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரையில், இக்கல்வி ஆண்டில் தகுதி பெற்ற பணி நாடுநர்களை, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தெரிவு செய்து. தொகுப்பூதிய அடிப்படையில், தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதன் கீழ் இடை நிலை ஆசிரியர் ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இதற்கு டி.டி.எட் மற்றும் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 6 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ் 1, கணிதம் 1, அறிவியல் 2, சமூக அறிவியில் 1, கம்ப்யூட்டர் சயின்ஸ் 1. ஆகிய பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சம்மந்தப்பட்ட பாடங்களில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் மற்றும் பி.எட் பட்டம் பெற்று டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் 4 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ் 1, தாவரவியல் 1, விலங்கியல் 2, ஆகிய பாடவாரியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சம்மந்தப்பட்ட பாடங்களில் முதுநிலை பட்டம் மற்றும் பி.எட் பட்டம் பெற்று டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும், 1.7.24 அண்று பொது பிரிவினர் 53 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 58 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதார்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்று நகல்களுடன் மாவட்ட திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம், கொல்லிமலை, நாமக்கல் மாவட்டம் 637411 என்ற முகவரிக்கு 15.07.2024 மாலை 05.45மணிக்குள் பெறப்படும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். மாத தொகுப்பூதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000,- பட்டதாரி ஆசிரியர் ரூ.15,000,- முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் ரூ18,000.
மேலும் விபரங்களை நாமக்கல், மாவட்ட பழங்குடியினர் திட்ட அலுவலக அறிவிப்பு பலகையினைப் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu