நியூ டூ பிசினஸ் திட்டத்தில் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

Namakkal News- நியூ டூ பிசினஸ் திட்டத்தில் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு ( மாதிரி படம்)
Namakkal News, Namakkal News Today- நாமக்கல் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் நியூ டூ பிசினஸ் என்ற புதிய திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் புத்துணர்வு பெற்று, பல மேம்பாடுகள் செய்யப்பட்டு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரம், வாழ்க்கைதரம் மேம்பாடு, ஊரக நிறுவனங்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு தேவையான நிதியுதவிகளை அமைத்து தருவதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும். இத்திட்டம் தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் 120 வட்டாரங்களில், 3,394 ஊராட்சிகளில் செயல்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், புதுச்சத்திரம், பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய வட்டாரங்களில் உள்ள 87 கிராம பஞ்சாயத்துகளில் செயல்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஊரக தொழில் முனைவோர்களுக்கு, இணை மானிய நிதிதிட்டத்தில் 30 சதவீகிதம் மானியத்தில், பேங்குகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை புதிய மற்றும் பழைய தொழில் முனைவோர்கள் 184 நபர்களைக் கண்டறிந்து, தகுதியின் அடிப்படையில் தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தற்போது சிறிய மாற்றம் செய்து நியூடூபிசினஸ் என்ற புதிய கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் செயல்படும் 87 ஊராட்சிகளில் புதிய மற்றும் பழைய தொழில் செய்யும் தொழில் முனைவோர்கள் இதுவரை வங்கிகளிலோ அல்லது பிற நிதி நிறுவனங்களில் தொழில்கடன் பெறாமல் இருந்தால், அவர்களை கண்டறிந்து தொழில்கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 21 முதல் 55 வயதிற்குள் உள்ள சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் அல்லது ரேஷன் கார்டில் உள்ள யாராவது ஒருவர் சுய உதவிக்குழுவில் இருந்து தொழில் முனைவோராக விரும்பினால், சிபில் மதிப்பீடு, பயனாளி பங்கு தொகை போன்ற விதிகளுக்குட்பட்டு கடனுதவி செய்யப்படும்.
இவ்விதிகளின்படி, கடன் பெற விரும்புவோர், திட்ட அலுவலர்கள் மோகனூர் 83448 96170, புதுச்சத்திரம் - 94432 01642 , பள்ளிபாளையம்-91597 38233 மற்றும் திருச்செங்கோடு- 89408 01966 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu