கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

கோப்பு படம்
நாமக்கல்:
முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-25ம் ஆண்டிற்கான, முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் www.tncu.tn.gov.in என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம், வரும் ஜூலை, 19ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். விண்ணப்ப கட்டணம் ரூ. 100செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரும், ஆக. 1ம் தேதி, குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி காலம், 12 மாதம். இரண்டு பருவ முறைகளாக தமிழ் வழியில் மட்டும் கற்பிக்கப்படும். பயிற்சிக்கான கட்டணம், ரூ. 18,750. பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அதில் சுய ஒப்பமிட்டு, நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டை மூலமோ அனுப்ப வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு, www.tncu.tn.gov.in என்ற வெப்சைட்டிலோ அல்லது நாமக்கல் சேலம் ரோட்டில் அமைந்துள்ள. நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 -290908, 90808 38008 என்ற தொலைபேசி, மொபைல் போன் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu