நாமக்கல் தொகுதிக்கு காஞ்சிபுரத்தில் இருந்து கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

நாமக்கல் தொகுதிக்கு காஞ்சிபுரத்தில் இருந்து   கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
X

காஞ்சிபுரத்தில் இருந்து நாமக்கல் மக்களவை தொகுதிக்கு வந்த தேவையான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியில் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் உமா, தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 1,670 கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கு வந்து சேர்ந்தது

மக்களவை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு ஓட்டுச்சாவடிக்கு 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதற்குத் தேவையான 1,670 கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, நாமக்கல்லுக்கு வந்து சேர்ந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு, வாக்குசாவடிகளில் பயன்படுத்துவதற்காக தேர்தல் கமிஷன் மூலம் 3,995 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,316 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,301 வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான விவிபேட் இயந்திரங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு, அவை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்களில் காவல்துறை பாதுகாப்புடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தற்போது, நாமக்கல் மக்களவை தேர்தலில் 40 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதனையொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளது. இதற்கு கூடுதல் பயன்பாட்டிற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து 1,670 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளன.

அதைத் தொடர்ந்து, கூடுதலாக வரப்பெற்ற 1,670 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின், முதல் நிலை சரிப்பார்க்கும் பணிகள் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா, தேர்தல் ஆணையத்தின் பொதுப் பார்வையாளர் ஹர்குன்ஜித் கவுர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், பொறியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்