பாசிப்பயறு சாகுபடியில் மாநில சாதனை; புதுச்சத்திரம் பெண் விவசாயிக்கு பரிசு
Namakkal news-பாசிப்பயறு சாகுபடியில், மாநில அளவில் அதிக மகசூல் பெற்று சாதன படைத்த, புதுச்சத்திரம் பெண் விவசாயி கவிதாவுக்கு, கலெக்டர் உமா பரிசு வழங்கினார்.
Namakkal news, Namakkal news today- பாசிப்பயறு சாகுபடியில், மாநில அளவில் அதிக மகசூல் பெற்று சாதனை புரிந்து புதுச்சத்திரம், பெண் விவசாயிக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகிழ்ச்சிக்கு தலைமை வகித்து, விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை 668.51 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 111.23 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை நெல் 1,675 எக்டர், சிறுதானியங்கள் 43,078 எக்டர், பயறு வகைகள் 6,604 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 26,953 எக்டர், பருத்தி 1,285 எக்டர் மற்றும் கரும்பு 7,385 எக்டர் என மொத்தம் 86,980 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 423 எக்டர், கத்திரி 266 எக்டர், வெண்டை 208 எக்டர், மிளகாய் 165 எக்டர், மரவள்ளி 1,391 எக்டர், வெங்காயம் 1,955எக்டர், மஞ்சள் 1,882 எக்டர் மற்றும் வாழை 2,114 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின்கீழ் நெல் சம்பா பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.549.82 ஐ16.12.2024 தேதிக்குள்ளும் மற்றும் தோட்டக்கலை பயிரான சிறிய வெங்காயம் பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2,050.10-ஐ 30.11.2024 தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும். ரபி பருவத்தில் உளுந்து பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2,28.23-ஐ 15.11.2024 தேதிக்குள்ளும், பாசிப்பயறு பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.191.44-ஐ 15.11.2024 தேதிக்குள்ளும், சோளம் பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.112.24-ஐ 30.11.2024தேதிக்குள்ளும், மக்காச்சோளம் பயிருக்கு பிரிமீயத் தெகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.478.69-ஐ 30.11.2024 தேதிக்குள்ளும், நிலக்கடலை பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.315.67-ஐ 30.12.2024 தேதிக்குள்ளும், பருத்தி பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.350.66-ஐ 17.03.2025 தேதிக்குள்ளும் மற்றும் கரும்பு பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1165.84-ஐ 31.03.2025 தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.
மேலும், தோட்டக்கலை பயிர்களான தக்காளி பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1017.64-ஐ 31.01.2025 தேதிக்குள்ளும், மரவள்ளி பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.619.48-ஐ 28.02.2025 தேதிக்குள்ளும், மற்றும் வாழைப்பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1857.44-ஐ 28.02.2025 தேதிக்குள்ளும் விவசாயிகள் பணம் செலுத்தி பயிர் இன்சூரன்ஸ் செய்து பயன் பெறலாம் என கலெக்டர் கூறினார்.
புதுச்சத்திரம் வட்டரத்தில் கவிதா என்பவர் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் 1,345 கிலோ பாசிப்பயறு அறுவடை செய்து சாதனை புரிந்தமைக்கு மாநில அளவில் முதல் பரிசாக ரூ.15,000-க்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் அருளரசு ஆர்டிஓக்கள் பார்த்திபன், சுகந்தி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பேபிகலா, தோட்டக்கலைத் துணை இயக்குநர் புவனேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu