நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு

நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு
X

கோப்புப்படம் 

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.15 ஆக நிர்ணயம் செய்ய்பபட்டுள்ளது

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 2ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ. 5.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் மைனஸ் இல்லாதபண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 570, பர்வாலா 472, பெங்களூர் 565, டெல்லி 491, ஹைதராபாத் 495, மும்பை 560, மைசூர் 572, விஜயவாடா 515, ஹொஸ்பேட் 525, கொல்கத்தா 540.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.128 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 107 ஆக சிகா நிர்ணயித்துள்ளது.

Tags

Next Story
why is ai important to the future