நாமக்கல் மாவட்டத்தில் ஓராண்டில் கர்ப்பிணி பெண்களுக்கு 3,866 யூனிட் ரத்தம்; கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் ஓராண்டில் கர்ப்பிணி பெண்களுக்கு  3,866 யூனிட் ரத்தம்; கலெக்டர் தகவல்
X

Namakkal news-நாமக்கல்லில் நடைபெற்ற, தேசிய தன்னார்வ ரத்த தான தின விழாவில், ரத்த தானம் அளித்தவர்களுக்கு கலெக்டர் உமா கேடயம் வழங்கி பாராட்டினார்.

Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில் ஒரு ஆண்டில் கர்ப்பிணி பெண்களுக்கு 3,866 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாவட்டத்தில் ஒரு ஆண்டில் கர்ப்பிணி பெண்களுக்கு 3,866 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், தேசிய தன்னார்வ ரத்த தான தின விழா நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ரத்த தானம் அளித்த 36 பேருக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட இடங்களில் பகுதிகளில் 3 அரசு ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. 2023 ஆம் ஆண்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 4,912 யூனிட்கள் ரத்தம் சேகரிக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 101 ரத்ததான முகாம்களின் மூலம் 8,054 யூனிட்கள் ரத்தம் சேகரிக்கப்பட்டு நோயாளிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு 3,866 யூனிட்கள் ரத்தம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் அருளரசு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி, மாவட்ட ரத்த வங்கி அலுவலர் அன்புமலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story