நாமக்கல் மாவட்டத்தில் ஜமாபந்தி துவக்கம்; முதல் நாளில் 338 கோரிக்கை மனுக்கள்

நாமக்கல் மாவட்டத்தில் ஜமாபந்தி துவக்கம்;  முதல் நாளில் 338 கோரிக்கை மனுக்கள்

Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில் ஜமாபந்தி முதல் நாளில் 338 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. (மாதிரி படம்)

Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில் ஜமாபந்தி முதல் நாளில் 338 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாவட்டத்தில் ஜமாபந்தி முதல் நாளில் 338 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.- நாமக்கல், மாவட்டத்தில் துவங்கிய ஜமாபந்தியில், 8 தாலுகாவில் 338 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், பசலி ஆண்டு 1433-க்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) துவங்கியது. நாமக்கல் தாலுகாவில், வரும் 21ம் தேதி வரையும், ராசிபுரத்ததில் வரும் 20ம் தேதி வரையும், கொல்லிமலையில் 12ம் தேதி வரையும் நடைபெறுகிறது. சேந்தமங்கலத்தில் வரும் 20ம் தேதி வரையும், மோகனூரில் வரும் 18ம் தேதி வரையும், திருச்செங்கோட்டில் வரும் 26ம் தேதி வரையும், ப.வேலூ வரும் 21ம் தேதி வரையும், குமாரபாளையத்தில் 13ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

இந்த ஜமாபந்தி அரசு விடுமுறை, சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் மாதத்தின் 3வது புதன் கிழமை (ஜூன் 19) நீங்கலாக, அனைத்து வேலை நாட்களிலும், காலை 10 மணி முதல், அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது.

நாமக்கல் தாலுகாவில், தனி சப் கலெக்டர் பிரபாகரன் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. செல்லப்பம்பட்டி, களங்காணி, மின்னாம்பள்ளி, ஏளூர், தானத்தம்பட்டி உள்பட 9 கிராம மக்கள் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகள் குறித்து 47 மனுக்களை அளித்தனர். மாவட்டத்தில் முதல் நாளில் பட்டா மாறுதல், உட்பிரிவு, கம்ப்யூட்டர் திருத்தம், பிறப்பு, இறப்பு சான்று, இண்டர்நெட் மூலம் வழி சான்றுகள், எப் லைன், இலவச வீட்டு மனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றுதல், ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் வழங்கப்பட்டது.

அதில் பட்டா மாறுதல் கேட்டு 53, பட்டா மாறுதல் உட்பிரிவு இல்லாதவை 79, இலவச வீட்டுமனை பட்டா 45, ரேஷன் கார்டு 10, இதர மனுக்கள் 85 உள்பட மொத்தம், 338 மனுக்கள் பெறப்பட்டது.

Tags

Next Story