வெங்காய பயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாள்!
Namakkal news-வெங்காய பயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய அழைப்பு (மாதிரி படம்)
Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், வெங்காய பயிருக்கு வருகிற 30ம் தேதிக்குள், பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறலாம்.
இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மல்லசமுத்திரம், புதுச்சத்திரம், ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள், முக்கிய தோட்டக்கலை பயிரான சின்ன வெங்காயம் சாகுபடி செய்கின்றனர். இந்த ரபி பருவத்தில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன் பெறலாம். சின்ன வெங்காயம் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு ரூ. 2,075-ஐ பிரிமியமாக, அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட பேங்குகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். பயிர் இன்சூரன்ஸ் செய்ய வரும் நவம்பர் 30 ஆம் தேதி கடைசி நாளாகும்.
விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் பாலிசி பெற, தங்கள் பாசன நிலம் சம்மந்தப்பட்ட ஆவணங்களாக அடங்கல், பேங்க் பாஸ்புக், ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு அந்தந்த பகுதி தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விளக்கம் பெற்று இன்சூரன்ஸ் செய்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu