நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 25 பேர் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 25 பேர் தேர்வு
X

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நேர்முக தேர்வில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் மோகனூர் ரோட்டில் அமைந்துள்ள, நகர்ப்புற ஆரம்ப சுகாதார வளாகத்தில், அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றது. 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதில் 25 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நேர்காணலை நாமக்கல் மாவட்ட மேலாளர் சின்னமணி மற்றும் வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ் தலைமையில் சேலம் மாவட்ட மேலாளர் மனோஜ் முன்னிலையில், சேலம் மண்டல மேலாளர் அறிவுக்கரசு நடத்தினார். இதில் டிரைவர் பணிக்கு, டிரைவிங் லைசென்ஸ், உயரம், கல்வி சான்று சரிபார்க்கப்பட்டு, வாகனம் ஓட்டி பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தம் 10 பேர் ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மருத்துவ உதவியாளர்களுக்கான பணிக்கு, கல்விச்சான்று. முதலுதவி சிகிச்சைக்கான அடிப்படை தேர்வு, எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 15 பேர் மருத்துவ உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த நேர்முகத் தேர்வில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கு மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர் இவர்களுக்கு சென்னையில் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags

Next Story