108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு: நாமக்கல்லில் நாளை நேர்முகத் தேர்வு

பைல் படம்
நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு நாளை நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
108 ஆம்புலன்ஸ் சேவை ஒரு கட்டணம் இல்லாத மருத்துவம், போலீஸ் மற்றும் தீ முதலிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு சேவை நம்பராகும். இந்த சேவை பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய முற்றிலும் இலவச சேவைம். தமிழக அரசு தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் இஎம்ஆர்ஜ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனத்துடன் அவசரகால சேவைக்காக, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைத்து, சென்னையில் தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தை, தலைமை இடமாகக் கொண்டு 108 அவசரகால சேவை மையம் இயங்கி வருகிறது.
இச்சேவைக்காண வாகன டிரைவர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை 5 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, நாமக்கல் திருச்சி ரோட்டில் பழைய கோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. டிரைவர்களுக்கான அடிப்படை தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 செ.மீ இருக்க வேண்டும். வயது 24 முதல் 35க்கு மிகாமல் இருக்க வேண்டும். லைட் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பெற்றிருக்க வேண்டும்.
லைசென்ஸ் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன லைசென்ஸ் பெற்று குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்று இருக்க வேண்டும். டிரைவர்களுக்கான தேர்வு முறை, எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத் துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ. 15,235 மொத்த சம்பளமாக வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.
மருத்துவ உதவியாளர்களுக்கான தகுதி: பி.எஸ்.சி. நர்சிங்,அல்லது ஜி.என்.எம், ஏ.என்.எம், டி.எம்.எல்.டி, ( 12 வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரி, பிஎஸ்சி ஜுவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். ஆண் பெண் இரு பலரும் கலந்து கொள்ளலாம்.
மருத்துவ உதவியாளர்கான தேர்வு முறை: எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முக உடற்கூரியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான தேர்வு, மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். சம்பளம் ரூ. 15,435 மொத்த சம்பளமாக வழங்கப்படும்.தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். (பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்).
மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் 7397724829 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் நேரில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu