சங்ககிரி பகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆட்சியர் பங்கேற்பு

சங்ககிரி பகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு  விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆட்சியர் பங்கேற்பு
X

Namakkal news, Namakkal news today- தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, சங்ககிரியில் பஸ் பயணிகளுக்கு துண்டுப்பிரசுரங்களை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வழங்கினார்.

Namakkal news, Namakkal news today- சங்ககிரி பகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் பங்கேற்றார்.

Namakkal news, Namakkal news today-சங்ககிரி பகுதியில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்துகொண்டார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 16ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளது. தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், நாள்தோறும் மாவட்ட ஆட்சியர் உமா அறிவுறுத்தலின்படி, நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச நடைபெற்று வருகிறது. மேலம், தேர்தல் வாக்குப்பதிவு அழைப்பிதழ் தாம்பூலம் தட்டுடன் வழங்குதல், விழிப்புணர்வு வாசகம் பொறிக்கப்பட்ட பலூன்கள் பறக்கவிடுதல், விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய வழிகளில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உடப்பட்ட சங்ககிரி சட்டசபை தொகுதியில் நடைபெற்ற, தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்துகொண்டு தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற தலைப்பில், வாக்காளர்களுக்கு 100 சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி ஸ்டேண்டை பார்வையிட்டு பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். மேலும், தேர்தல் நாளான ஏப். 19லம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு அவர் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேர்தலுக்காக எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், வைகுந்தம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
அடுத்த சில ஆண்டுகளில் AI மூலம் வந்துவரும் அற்புத மாற்றங்கள்!