பள்ளிபாளையத்தில் தடுப்பூசி பற்றாக்குறை : மருத்துவ ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
பள்ளிபாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரிசையில் காத்திருந்து டோக்கனை வாங்கிச் செல்லும் மக்கள்
தமிழகம் முழுவதும் கோவாக்சின், கோவீஷீல்டு ஆகிய இரண்டு வகையான கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனைகளில் முன்கள பணியாளர்களுக்கு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது! நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு அரசு மருத்துவமனையில் கோவீஷீல்டு தடுப்பூசி 150கோவேக்சின் தடுப்பூசி 100 நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 தடுப்பூசிகளும் போடப்படும் என தெரிவிக்கபட்டுருந்தது. இதனையடுத்து அதிகாலை 5 மணி முதலே நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் 400-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட காத்திருந்தனர்.
பிறகு அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள் பொதுமக்களுக்கு டோக்கனை வழங்க தொடங்கினர். தடுப்பூசிகள் எண்ணிக்கையை பொதுமக்கள் கூடுதலாக இருந்ததினால் பலரும் டோக்கன் வழங்கபடவில்லை. இதனால், டோக்கன் கிடைக்காதவர்கள் அதிருப்தி அடைந்து அங்கிருந்த மருத்துவ ஊழியர்களிடம் தினம்தோறும் ஊசி போடுவதற்காக வந்து செல்கிறோம். அதிகாலை முதலே காத்திருந்தாலும் தடுப்பூசிகள் கிடைப்பதில்லை. இதனை முறைப்படுத்தி தடுப்பூசிகள் போடவேண்டும்.
அதே நேரத்தில் பள்ளிபாளையம் நகர்புற பகுதியில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் வெறும் 100 முதல் 200 தடுப்பூசிகள் மட்டுமே போடப்படுவதால் மக்கள் எண்ணிக்கைக்கேற்ப தடுப்பூசிகள் இல்லை எனவும் பொதுமக்கள் அங்கிருந்த மருத்துவ ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் பிறகு அங்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்து அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர் அதே நேரத்தில் தடுப்பூசிகளுக்கு டோக்கன் வழங்கும் போது ஆளுங்கட்சியினரின் தலையீடு இருப்பதாகவும் எண்ணிக்கைக்கு ஏற்ப தடுப்பூசி போடப்படாமல் ஊசிகள் பதுக்கபடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu