பழுதான ரோடு: ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூர் அருகே அவலம்

பழுதான ரோடு: ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூர் அருகே அவலம்
X
சாலையில் ஏற்பட்டுள்ள குழியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். 
அலங்காநல்லூரில், குண்டும் குழியுமாக உள்ள மதுரை சாலையை செப்பனிட வேண்டும் என, அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது, அலங்காநல்லூர் இருந்து மதுரை செல்லும் சாலை. கடந்த ஆட்சி காலத்தில் புதிதாக போடப்பட்டது. ஒரு வருடம் முன்பாக இந்த சாலை பெயர்ந்து விட்டது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிகமாக ஆபத்துக்கு விழுந்து ஆபத்து உள்ளாகின்றனர்.

எனவே, தற்போது உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் சீர்செய்து பேட்ச் ஒர்க் என்று சொல்லக்கூடிய சின்ன சின்ன பள்ளங்களை மூடி வருகின்றனர். ஆனால் ,ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள இடத்தை, நெடுஞ்சாலைத்துறையினர் மூடவில்லை. நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்து விபத்துகள் நடைபெறாமல் இருக்க சாலையை சரி செய்ய வேண்டும் என, அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!