அழகர்கோவில் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் வேண்டுகோள்
கள்ளழகர் - கோப்புப்படம்
மதுரை அருகே அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில், சித்திரைப்பெருந்திருவிழா வருகிற 12.04.2022 முதல் 21.04.2022 வரை நடைபெறவுள்ளது. மேற்படி ,திருவிழாவில் அருள்மிகு கள்ளழகர் 14.04.2022-ஆம் தேதியன்று மாலை 6.10 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் அழகர் கோவிலிருந்து புறப்பட்டு மதுரை வண்டியூர் வரை சென்று மீண்டும் 20.04.2022-ஆம் தேதியன்று நண்பகல் 12.05 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் அழகர்கோவில் திரும்புகிறார்.
16.04.2022-ஆம் தேதியன்று அருள்மிகு கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சியன்று தண்ணீர் பீச்சும் வைபவம் திவான் இராமராயர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி, நிகழ்ச்சியில் பக்தர்கள் அவரவருக்குரிய வழக்கப்படி விரதமிருந்து தோல்பையில் தண்ணீர் சுமந்து சிறிய குழாய் (பைப்) மூலம் சுவாமியின் மீது தண்ணீர் பீச்சி தங்களது நேர்த்திகடனை செலுத்துவது வழக்கம்.
பக்தர்களின் விரத வலிமைக்கு ஏற்ப அவரவர் தோல்பையில் இருந்து தண்ணீர் வெளியேறி சுவாமி மீது பட்டு அபிஷேகமாகும் என்பது ஐதீகம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் விரத ஐதீகத்தை மீறி செயற்கையான மற்றும் அதிக விசையான, பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிபொருட்களை கலந்து அடிப்பதால், அருள்மிகு ஸ்ரீகள்ளழகர் சுவாமி சுவாமியின் குதிரை வாகனம் மற்றும் ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதாலும், திரவியம் கலந்த தண்ணீர் பீச்சுவதால் அப்பகுதியில், சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், தண்ணீர் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து அந்த பாக்கெட் தண்ணீரை சுவாமியின் மீது பீச்சுகின்றனர். இவ்வாறான செயல் ஐதீகத்தை மீறும் செயலாகும். இவ்வாறு விரத ஐதீகத்தை மீறி செயற்கையான மற்றும் அதிக விசையான பயன்படுத்தி வேதிபொருட்கள் கலந்த தண்ணீரை சுவாமிக்கு பீச்சுவதால், அருள்மிகு ஸ்ரீகள்ளழகர் சுவாமி சுவாமியின் குதிரை வாகனம் மற்றும் ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதாலும் திரவியம் கலந்த தண்ணீர் பீச்சுவதால் அப்பகுதியில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களும், பட்டர்கள் மற்றும் பரிசாரகர் பணியாளர்களும் ஆகியோரும் பாதிக்கப்படுவதால், அந்த திரவியங்கள் மற்றும் வேதிபொருட்களை கலந்த தண்ணீரின் தன்மையின் காரணமாக உடல் எரிச்சல் ஏற்படுவதுடன் அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் முழுவதுமாக வீணாகிவிடும்.
எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைப்பெருந்திருவிழாவில் ,தண்ணீர் பீச்சும் பக்தர்கள் அதிக விசையான மூலம் தண்ணீர் பீச்சாமலும் மற்றும் தண்ணீர் பாக்கெட் மூலம் தண்ணீர் பீச்சாமலும் விரத ஐதீகத்தின்படி இயற்கையான தோல் பையில் சிறிய பைப் பொருத்தி திரவியங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் ஏதும் கலக்காமல்சுத்தமான தண்ணீர் மட்டும் பீச்சும் வகையில் விரத ஐதிகத்தை கடைபிடித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இறையருள் பெற வேணடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu