கனமழை எதிரொலி - முற்றிலும் பாதிப்பை சந்தித்த ரப்பர் விவசாயம்

கனமழை எதிரொலி - முற்றிலும் பாதிப்பை சந்தித்த ரப்பர் விவசாயம்
X

கோப்பு படம்

தொடரும் கனமழையால், கன்னியாகுமரி மாவட்டத்தில், ரப்பர் விவசாயம் முற்றிலும் பாதிப்பை சந்தித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி, கனமழையானது பெய்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய விவசாயங்களில் ஒன்றான ரப்பர் விவசாயம் முற்றிலுமாக பாதிப்பை சந்தித்து உள்ளது.

மழைக்காலத்தில், ரப்பர் பால் வெட்ட முடியாது என்ற நிலையில், ரப்பர் பால் வெட்டும் தொழிலை மட்டுமே நம்பி வாழும் நூற்றுக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். மாவட்டத்தில், மலையோர பகுதிகளான பெருஞ்சாணி, சிவலோகம், அருமனை உள்ளிட்ட மேற்கு மாவட்ட பகுதிகளில் பெருமளவில் ரப்பர் விவசாயம் நடைபெறும் நிலையில் அந்த பகுதிகளிலேயே அதிக அளவில் மழையும் பதிவாகி உள்ளது.

அதன்படி, புத்தன் அணை பகுதியில், 37.2 மிமீ மழையும், பெருஞ்சாணி பகுதியில் 36.0 மிமீ மழையும், சிவலோகம் பகுதியில் 27.0 மிமீ மழையும் பதிவாகி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!