ஈரோட்டில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது..!

ஈரோட்டில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது..!
X

கைது செய்யப்பட்ட ராகுல்.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் அருகே வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கும், செலுத்துவதற்கும் ஏதுவாக, ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி அதிகாலை ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளார். பின்னர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

அப்போது, அந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் அடிக்க தொடங்கியதால், பயந்து போன மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த நிலையில், காலை அந்த ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வந்த ஒருவர், ஏடிஎம் இயந்திரம் உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்த போலீசார், வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக அசோகபுரம், ஐயங்காடு பகுதியை சேர்ந்த தறிப்பட்டறை தொழிலாளியான வாலிபர் ராகுல் (வயது 21) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!