அந்தியூர்: வீட்டில் மெய்மறந்து தூங்கிய குடும்பத்தார்: அசால்டாக திருடிச்சென்ற வாலிபர்

அந்தியூர்: வீட்டில் மெய்மறந்து தூங்கிய குடும்பத்தார்: அசால்டாக திருடிச்சென்ற வாலிபர்
X

கைதுசெய்யப்பட்ட வெங்கடேஷ்.

அந்தியூர் அருகே குடும்பத்தினர் மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்த போது, ரூ.35,500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அசால்டாக திருடிக் கொண்டு சென்ற வாலிபரை கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் திருநீலகண்டர் வீதியை சேர்ந்தவர் கனகராஜ் மகன் பூபதி (வயது 32). இவர் அதே பகுதியில் வீட்டின் கீழ் மாடியில் பிவிசி கதவுகள் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 8ம் தேதி இரவு கடையின் கீழ் மாடியில் பூபதியின் பெற்றோரும், மேல் மாடியில் உள்ள அறையில் பூபதி மற்றும் அவரது மனைவியுடன் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர்.

பின்னர், அடுத்தநாள் அதிகாலை கீழே வந்து பார்த்த போது கடையின் பொருட்கள் கலைந்திருந்தன. மேலும், பர்ஸில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் ரொக்கம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 12 கிராம் தங்க சைன், ரூ.1,500 மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் உண்டியலில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சில்லரை காசுகள் என மொத்தம் ரூ.35,500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் திருடிக்கொண்டு சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, பூபதி அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பிரம்மதேசம் அருகே உள்ள சின்னக்குளம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ் (26) என்பவர் கடைக்குள் புகுந்து திருடியதாக அவரை போலீசார் கைது செய்து, ரூ.35,500 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்