அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
X

போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது எடுத்த படம்

அந்தியூர் அடுத்த பர்கூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள தாமரைகரை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு, கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. இதுகுறித்து பர்கூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த தாமரைகரை பகுதி மலைவாழ் மக்கள், இன்று அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து வந்த பர்கூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தயதை, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் தாமரை கரையிலிருந்து மடம் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story