/* */

பவானிசாகர் அணை நீர்மட்டம் 79 அடியாக சரிவு..!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நண்பகல் 12 மணி நிலவரப்படி 79.95 அடியாக சரிந்தது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணை நீர்மட்டம் 79 அடியாக சரிவு..!
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நண்பகல் 12 மணி நிலவரப்படி 79.95 அடியாக சரிந்தது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால், பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து 1,014 கன அடியாக இருந்த நிலையில், இன்று நண்பகல் நிலவரப்படி 911 கன அடியாக குறைந்துள்ளது.

மேலும், அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் 79.95 அடியாக சரிந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (ஜன.21) இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 79.95 அடி ,

நீர் இருப்பு - 15.65 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 911 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 2,300 கன அடி ,

பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 700 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 2,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 21 Jan 2024 9:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...