பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83 அடியாக சரிவு..!

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83 அடியாக சரிவு..!
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை (டிச.19) இன்று காலை 8 மணி நிலவரப்படி 83.90 அடியாக சரிந்தது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை (டிச.19) இன்று காலை 8 மணி நிலவரப்படி 83.90 அடியாக சரிந்தது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானி சாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் என மாறி மாறி வருகிறது. மேலும், கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மெல்ல சரியத் தொடங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை (டிச.19) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 83.90 அடி ,

நீர் இருப்பு - 17.84 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 1,011 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 2,400 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,000கன அடி நீரும், அரக்கன் கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 300 கன அடி நீரும் , குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 2,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பவானி சாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!