தேசிய வாக்காளர் தினம்: ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

தேசிய வாக்காளர் தினம்: ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
X

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி 

ஈரோட்டில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

ஈரோட்டில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு "வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்" என்ற வாக்காளர் தின உறுதிமொழியினை இணை ஆணையர் (மாநில வரி, ஈரோடு கோட்டம்) மற்றும் கண்காணிப்பு அலுவலர் லஷ்மி பவியா தண்ணீரு முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

பின்னர், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து அனைத்து வாக்காளர்களும் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில், 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு "வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்" என்ற வாக்காளர் தின உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.


நாடாளுமன்ற தேர்தல் 2024 விரைவில் நடைபெறவுள்ளது, வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும், மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024ல் புதிதாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையத்தின் சார்பில், ஒத்த புகைப்படங்கள், ஒத்த விபரங்களை கொண்ட வாக்காளர்கள் பட்டியலை சரிசெய்து, பட்டியலை சிறப்பாக செம்மைபடுத்திய பணிக்காக நமது ஈரோடு மாவட்டத்திற்கு விருது கிடைத்துள்ளது என்றுஅவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, இளம் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அட்டையினை வழங்கி, இளம் வாக்காளர்கள், மூத்த வாக்காளர்கள், விளிம்பு நிலை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர், மூன்றாம் பாலின வாக்காளர்கள் மற்றும் மாவட்ட அடையாளமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

இதனையடுத்து, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி சுவரொட்டி வடிவில் சுவர் இதழ் போட்டி, பாட்டு போட்டி, கடித வரைவு போட்டி, கோலப் போட்டி (மகளிர் சுயஉதவிக் குழு) மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


மேலும், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும், சிறந்த தேர்தல் கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், சிறந்த கல்லூரி வளாக மாணவ தூதுவர் ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் 2024ஐ முன்னிட்டு, பொதுமக்களிடையே மின்னணு வாக்கு சாதனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 8 நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குருநாதன் (கணக்குகள்), வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர், ஈரோடு வட்டாட்சியர் ஜெயகுமார், கோமதி (யங் இந்தியா அசோசியேசன்), பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil