ஈரோடு மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகள் வரன்முறை கால நீட்டிப்பு..!

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகள் வரன்முறை கால நீட்டிப்பு..!
X

மனைப் பிரிவுகள் (கோப்புப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

ரோடு மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 2016 அக்.20ம் தேதி அல்லது அதற்கு முன்னா் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை, மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ஆம் ஆண்டு விதிகளுக்கு உள்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 2024 பிப். 29ம் தேதி வரை வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து கடந்த செப். 4ம் தேதி வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அரசாணை எண் 118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவா்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்துகொள்ளலாம். இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இறுதி வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture