அறுந்து போன நகைகளை அடகு வைப்பவர்கள் மீது போலீசில் புகார் செய்ய வேண்டும்..!

அறுந்து போன நகைகளை அடகு வைப்பவர்கள் மீது போலீசில் புகார் செய்ய வேண்டும்..!
X

நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

அறுந்து போன நகைகளை அடகு வைப்பவர்கள் மீது போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தெரிவித்துள்ளார்.

அறுந்து போன நகைகளை அடகு வைப்பவர்கள் மீது போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தெரிவித்துள்ளார்.

நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது .கூட்டத்திற்கு ஈரோடு மாநகர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ராதா செல்வம் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட தலைவர் இளஞ்செழியன், செயலாளர் சுரேஷ் ,பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பேசும்போது கூறியதாவது, ஒரு சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நேரத்தில் நகை வியாபாரிகள் தாங்கள் கொண்டு செல்லும் பணம் மற்றும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். இதனால் தேர்தலின் போது பறக்கும் படையினர் சோதனை நடத்தினால் எந்த பாதிப்பும் நடவடிக்கையும் இல்லாமல் உங்களது நகைகளை பாதுகாப்பாக கொண்டு செல்லலாம்.

மேலும் பழைய நகைகளை அடமானம் வைக்க வருபவர்கள் இளைஞர்களாக இருந்தால் சந்தேகப்படும் படி, இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் நகை அடமானம் வைக்க வரும் இளைஞர்கள் பற்றி சந்தேகம் இருந்தால் அது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வெளியூர்களில் இருந்து வரும் போலீசார் திருட்டு நகைகளை மீட்க வந்தால் சரியான ஆதாரம் காட்டினாலும் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தை நகை திருட்டுகள் இல்லாத மாவட்டமாக உருவாக்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றி திருட்டுகள் இல்லாத குற்றங்கள் இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் திகழ வேண்டும் இதற்கு நகை வியாபாரிகளாகிய நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவர் அவர் பேசினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்