அந்தியூரில் வாகன உதிரி பாக கடையில் ரூ.1 லட்சம் திருட்டு

அந்தியூரில் வாகன உதிரி பாக கடையில் ரூ.1 லட்சம் திருட்டு
X

பணம் திருட்டு (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வாகன உதிரி பாக கடையில் ரூ.1 லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்தியூரில் வாகன உதிரி பாக கடையில் ரூ.1 லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 38). இவர் அந்தியூரில் உள்ள பவானி ரோட்டில் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கார்த்திகேயன் நேற்று முன்தினம் இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அதன் பின்னர் நேற்று காலை 9 மணி அளவில் வந்து கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது மேஜையின் டிராயர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே பார்த்தபோது அதிலிருந்த ரூ. 1 லட்சத்தை காணவில்லை. இதுகுறித்து அவர் அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற பிறகு மர்மநபர்கள் கள்ளச்சாவியை போட்டு கடையை திறந்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் மேஜை டிராயரை உடைத்து திறந்து அதிலிருந்த ரூ.1 லட்சத்தை திருடிக்கொண்டு கதவை பூட்டிவிட்டு தப்பித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story