அந்தியூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடி.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பாலகுட்டையை பகுதியை சேர்ந்த குருசாமி மகன் குமார் (வயது 31). தவிட்டுப்பாளைம் பழனியப்பா 3வது குறுக்கு வீதியை சேர்ந்த அல்லிமுத்து மகள் சித்ரா (20). சித்ரா குமாரின் அத்தை மகள் ஆவார்.
இவர்கள் இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே வயது வித்தியாசம் காரணமாக, இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்ததால் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், காதலர்கள் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, இன்று மாலை அந்தியூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதலர்கள் இருவரும் தஞ்சம் அடைந்தனர்.
போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu