அந்தியூர் அருகே அத்தாணி கடையில் தேங்காய்பால் குடித்த தமிழிசை சவுந்தரராஜன்

அந்தியூர் அருகே அத்தாணி கடையில் தேங்காய்பால் குடித்த தமிழிசை சவுந்தரராஜன்
X

அத்தாணியில் உள்ள கூல்ரிங்ஸ் கடையில் தேங்காய்பால் குடித்த தமிழிசை சவுந்தரராஜன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணியில் உள்ள கூல்டிரிங்ஸ் கடையில் தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னரும், பா.ஜனதா மூத்த நிர்வாகியுமான தமிழிசை சவுந்தரராஜன் தேங்காய்பால் குடித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அந்தியூர் அருகே அத்தாணியில் உள்ள கூல்டிரிங்ஸ் கடையில் தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னரும், பா.ஜனதா மூத்த நிர்வாகியுமான தமிழிசை சவுந்தரராஜன் தேங்காய்பால் குடித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பாஜகவில் உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த 2ம் தேதி தொடங்கியது. கட்சி பல்வேறு நிலை நிர்வாகிகள் புதிய உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமை, ஆய்வு செய்வதற்காக தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னரும், பாஜக மூத்த நிர்வாகியுமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று (21ம் தேதி) சனிக்கிழமை வந்தார்.


அந்தியூர் அருகே அத்தாணி வழியாக வந்தபோது, திடீரென்று அங்கு சாலையோரம் தேங்காய்பாலுக்கு பிரபலமான மணி கூல்ரிங்ஸ் கடைக்கு சென்றார். பின்னர் அங்கு அமர்ந்து தேங்காய்பால் குடித்தார். அப்போது, பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர். கூல்ரிங்ஸ் கடையில் தேங்காய்பால் குடிப்பதை அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து ஏராளமானோர் தங்களது செல்போனில் தமிழிசை சவுந்தரராஜன் இருக்கும் காட்சியை படம் பிடித்தனர்.

மேலும், சுவையான தேங்காய் பாலும்....ஈரோடு வடக்கு மாவட்டம் செல்லும் வழியில் "அத்தாணி' என்ற ஊரில் சில சகோதரகள் வரவேற்பு அளித்துவிட்டு சொன்னார்கள்.. இந்த கடை.. 45 ஆண்டுகள் தேங்காய் பாலுக்கு மிக பிரபலம்... மக்கள் விரும்பி வரும்.. மணிக்கடை.. என்றார்கள்... மாணிக்கடைக்கு சென்று.. சுவையான தேங்காய் பால் அருந்தியாது சுவையான அனுபவம்.. மகிழ்ச்சி என்று சமூக வலைத்தளப்பக்கத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
ai marketing future