ஈரோட்டில் இலவச கணினி டேலி பயிற்சி: டிச.20ல் துவக்கம்..!

ஈரோட்டில் இலவச கணினி டேலி பயிற்சி: டிச.20ல் துவக்கம்..!
X

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், இலவச கணினி டேலி பயிற்சி வகுப்பு வரும் 20ம் தேதி முதல் துவங்குகிறது.

ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், இலவச கணினி டேலி பயிற்சி வகுப்பு வரும் 20ம் தேதி முதல் துவங்குகிறது.

இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

ஈரோட்டில் செயல்பட்டு வரும் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், வரும் டிசம்பர் 20ம் தேதி கணினி டேலி பயிற்சி வகுப்பு துவங்குகிறது. இந்த பயிற்சியானது டிசம்பர் 20ம் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி 30ம் தேதி வரை 30 நாட்கள் நடைபெறவுள்ளது. பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். இதில், ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

பயிற்சியின் போது, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். கிராமப் பகுதியைச் சோ்ந்த 18 முதல் 45 வயதுக்குட்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள், அவா்களது குடும்பத்தாரும் பயிற்சியில் சேரலாம். இதற்கான முன்பதிவு தற்போது நடக்கிறது.

இப்பயிற்சியானது, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு - 638002 என்ற முகவரியில் நடைபெறுகிறது. விருப்பமுள்ளவா்கள் 0424 2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 8778323213 , 7200650604 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!