/* */

தாட்கோ மூலம் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க கடனுதவி: ஈரோடு ஆட்சியர் தகவல்..!

உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க தாட்கோவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மானியக் கடனுதவி வழங்கப்படுகிறது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தாட்கோ மூலம் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க கடனுதவி: ஈரோடு ஆட்சியர் தகவல்..!
X

தாட்கோ.

உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க தாட்கோவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஏதுவாக புதியதாக தொழில் தொடங்குவதற்கு அனைத்து மாவட்டங்களில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் (பிஸியோதெரபி கிளினிக்) அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

உடற்பயிற்சி சிகிச்சை மையம் தொடங்க தனியார் நிறுவனம் மூலமாக சொந்தமாக கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் இடம் இல்லாதவர்களுக்கு வாடகை அடிப்படையில் இடங்கள் தேர்வு செய்து தரப்பட்டு உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்தும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், அத்தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து இலவச ஆலோசனைகளும் தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு இதற்கான உரிமையாளர் கட்டணம் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும்.

உடற்பயிற்சி சிகிச்சை பயிற்சியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் அல்லது எதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் தகுதியுள்ள நபர்கள் புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

உடற்பயிற்சி சிகிச்சை பயிற்சியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தொழிலுக்கு ரூ.6 லட்சம் திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் 5 முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு என்ற முகவரியிலும், 0424 2259453 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 19 Jan 2024 1:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...