அறுவடை வரை முறைநீர் பாசனம்; கீழ்பவானி விவசாயிகள் கோரிக்கை

அறுவடை வரை முறைநீர் பாசனம்; கீழ்பவானி விவசாயிகள் கோரிக்கை
X

கீழ்பவானி பாசனப் பயனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் நல்லசாமி.

கீழ்பவானி பாசனத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கும் முறைநீர் பாசனம் நெல் அறுவடை தொடர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கீழ்பவானி பாசனத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கும் முறைநீர் பாசனம் நெல் அறுவடை தொடர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கீழ்பவானி பாசனப் பயனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் நல்லசாமி, தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- பழைய பாசனங்களான கொடிவேரி, காலிங்கராயன் ஆகியவற்றிக்கு காவிரி தீர்ப்பின்படி ஒதுக்கி உள்ள ஓராண்டு நீரளவானது 8.13 டிஎம்சி ஆகும். ஆனால் இதற்கு மாறாக நடப்பாண்டில் இரு மடங்காக உயர்த்தி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டு கீழ்பவானி முதல் போக பாசனத்திற்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு முறைநீர் பாசனம் அமல்படுத்தப்பட்டு நடை முறையில் உள்ளது.

அண்மையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பவானிசாகர் அணைக்கான நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதைக் காரணம் காட்டி கீழ்பவானி பாசனத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முறைநீர் பாசனத்தை கைவிட்டு விடக்கூடாது. வருகிற ஜனவரியில் கீழ்பவானி ஒற்றைப்படை மதகுகளுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டி உள்ளது.

எனவே தற்போது இருந்து வரும் முறைநீர் பாசனத்தை தொடர்ந்தால் மட்டுமே ஒற்றைப்படை மதகுகளுக்கு தண்ணீர் திறக்க முடியும். எனவே தற்போது பயிரிடப்பட்டுள்ள நெல் அறுவடை முடியும் வரை முறை வைத்து நீர் விடுவது தொடர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings