தாட்கோ தொழில் முனைவு திட்டத்தில் மானியம் உயர்வு: ஆட்சியர் தகவல்..!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான தொழில் முனைவு திட்டங்களுக்கு மானியம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தாட்கோ மூலமாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்களான பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம் போன்றவற்றை ஒருங்கிணைத்து 'முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளா பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டம்' திட்டம் என ரூ.40 கோடி செலவில் புதிய திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், ஆதிதிராவிடர்களுக்கான தனி நபர் திட்ட தொகையில், முன்விடுப்பு மானியமாக விடுவிக்கப்படும் தொகை, 30 சதவீதத்தில் இருந்து, 35 சதவீதமாக உயர்த்தவும் அல்லது அதிகபட்சம் ரூ.3.50 லட்சம் என, இதில் எது குறைவானதோ, அதை கடன் வழங்கும் வங்கிக்கு வழங்கப்படும். பழங்குடியினருக்கு திட்ட மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் என இதில் எது குறைவானதோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
பயனாளியின் பங்குத் தொகை 5 சதவீதம் போக மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். 6 சதவீத வட்டி மானியத்தை 6 மாதங்களுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இருந்து பெற்று. ஒத்திவைப்பு காலம் உள்பட முழுவதுமாக திரும்ப செலுத்தும் காலம் வரை வட்டி மானியம் பெறுவதற்கான தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும். எனவே, தகுதியானவர்கள் ஈரோடு ஆட்சியர் அலுவலகம், 6வது தளத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0424 2259453 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu