அந்தியூரில் அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளர் - காசாளர் மோதல்

அந்தியூரில் அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளர் - காசாளர் மோதல்
X

கோப்புப் படம்.

அந்தியூரில் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளரும், காசாளரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

அந்தியூரில் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளரும், காசாளரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம், ஜீவா செட் எதிரேயுள்ள தென்றல் நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் சக்திவேல் (வயது 34). இவர், அந்தியூரில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டுக்கு நேற்று (5-ம் தேதி) காலை அதே பணிமனையில் காசாளராக பணியாற்றக்கூடிய நகலூரை சேர்ந்த ராமச்சந்திரன் (59), அவரது நண்பர் துரை என்பவருடன் அங்கு வந்துள்ளார். அப்போது ராமச்சந்திரனிடம் சக்திவேல் விடுமுறை கேட்க அலுவலகத்துக்கு வர வேண்டியதுதானே ஏன் இங்கு வருகிறீர்கள் என கூறியதாக தெரிகிறது.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் சக்திவேல், ராமச்சந்திரன் ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் இதுகுறித்து சக்திவேலும், ராமசந்திரனும் அந்தியூர் காவல் நிலையத்தில் தனி தனியாக புகார் அளித்தனர்.அதன்பேரில் போலீசார் தாக்குதலில் ஈடுபட்டதாக இருதரப்பை சேர்ந்த சக்திவேல், ராமச்சந்திரன், துரை ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு