ஈரோட்டில் ரேஷன் அரிசி கடத்தல்: தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞர் கைது

ஈரோட்டில் ரேஷன் அரிசி கடத்தல்: தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞர் கைது
X

தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சக்திவேல்.

ஈரோட்டில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஈரோட்டில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல்குமார் உத்தரவு படி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் அறிவுறுத்தலின் படி, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை கந்தம்பாளையம் பிரிவு சாலை பகுதியில் கடந்த 6ம் தேதி, சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் 40 மூட்டைகளில் 2,000 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக, பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த சக்திவேல் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கைது செய்யபட்ட சக்திவேல் மீது ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது இந்த குற்ற செயலை தடுக்கும் வகையில், கள்ள சந்தை தடுப்பு காவலில் கைது செய்ய ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டார். இதனையடுத்து, சக்திவேல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!