சத்தியமங்கலம் அருகே கர்நாடக மதுபாக்கெட் கடத்தியவர் கைது

சத்தியமங்கலம் அருகே கர்நாடக  மதுபாக்கெட் கடத்தியவர் கைது
X
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் பகுதியில், கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோட்டாமாளம் பகுதியில் , இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் சோதனை செய்தனர்.

இச்சோதனையில், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து 96 மது பாக்கெட்டுகள் மற்றும் 4 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
மிட்நைட்டில்  சாப்பிடுகிறீர்களா..? உடல் நலத்திற்கு வரக்கூடிய  எச்சரிக்கை மணி ஒலிக்கிறது..!