பவானியில் களைகட்டிய பொங்கல் பொருட்கள் விற்பனை

பவானியில் களைகட்டிய பொங்கல் பொருட்கள் விற்பனை
X

பவானி அந்தியூர் பிரிவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட கரும்புகள்.

காப்பு கட்டுதல் மற்றும் சங்கராந்தி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் பவானியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.

காப்பு கட்டுதல் மற்றும் சங்கராந்தி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் பவானியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.

தமிழர்களுடைய பாரம்பரிய திருவிழாவாக நான்கு நாட்களுக்கு வரிசைகட்டி கொண்டாடப்படும் ஒரு மாபெரும் திருவிழா பொங்கல் திருவிழாவாகும். மார்கழி மாதம் கடைசி நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) 14ம் தேதி போகிப் பண்டிகையில் ஆரம்பித்து, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று வரிசையாக 4 நாட்களுக்கு ஊரே கோலாகலமாக காட்சி அளிக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்து காணப்படும்.

அதன்படி, நாளை போகி பண்டிகையான காப்பு கட்டுதல் மற்றும் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், போகி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானியில் காப்பு கட்டுவதற்கு தேவையான பொருட்கள் விற்பனை களைக்கட்டி உள்ளது.

பவானி புதிய பேருந்து நிலையம், அந்தியூர் பிரிவு, பூக்கடை கார்னர், காலிங்கராயன்பாளையம், லட்சுமிநகர் உள்ளிட்ட பல இடங்களில், காப்பு கட்டுவதற்கு தேவையான வேப்பிலை, பூலப்பூ, ஆவராம்பூ கொத்துகள் விற்பனை கொண்டு வரப்பட்டு, கட்டு ஒன்று பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. இதேபோல், கரும்புகளும் குவிக்கப்பட்டு, இரண்டு கரும்புகள் 100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!