ஈரோடு மாவட்டத்தில் 6 துணை மின் நிலையங்களில் இன்றைய மின்தடை ரத்து..!
மின்தடை ரத்து அறிவிப்பு.
ஈரோடு மாவட்டத்தில் ஆறு துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (நவ.,18) அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூா், ஊராட்சிக்கோட்டை, எழுமாத்தூா், கஸ்பாபேட்டை, அளுக்குளி, நல்லகவுண்டன்பாளையம் ஆகிய 6 துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிக்காக சனிக்கிழமை (நவ.,18) இன்று மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணத்துக்காக இந்த 6 துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணி ஒத்திவைக்கப்படுகிறது. எனவே, அந்தியூா், பவானி, எழுமாத்தூா், கஸ்பாபேட்டை , அளுக்குளி, நல்லகவுண்டன்பாளையம் பகுதிகளில் சனிக்கிழமை வழக்கம்போல மின் விநியோகம் இருக்கும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரியம் மின் நிறுத்தம் அறிவிப்பு வெளியிடுவதும், வெளியிட்ட அன்று காலை அதனை ரத்து செய்வதும் வாடிக்கையாக உள்ளது. எனவே மின்வாரியம் முன்கூட்டியே திட்டமிட்டு மின்சார வாரியம் மின் நிறுத்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அடிக்கடி அறிவிப்பை வெளியிடுவதும், மாற்றுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பலர் அன்றைய நாளில் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உருவாகி உள்ளதாகவும், வருங்காலங்களில் இதனை தீர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu