அந்தியூர் அருகே ஒந்தனை மலைவாழ் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா..!

அந்தியூர் அருகே  ஒந்தனை மலைவாழ் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா..!
X

பர்கூர் ஒந்தனை மலைவாழ் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

வேளாளர் மகளிர் கல்லூரி என்.சி.சி. மற்றும் யூத் ஹாஸ்டெல்ஸ் சார்பில், அந்தியூர் அடுத்த பர்கூர் ஒந்தனை மலைவாழ் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.

வேளாளர் மகளிர் கல்லூரி என்.சி.சி. மற்றும் யூத் ஹாஸ்டெல்ஸ் சார்பில், அந்தியூர் அடுத்த பர்கூர் ஒந்தனை மலைவாழ் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி என்.சி.சி. மற்றும் யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளை பவளவிழா ஆண்டின் இருபத்தொன்பதாவது நிகழ்வாக, தேசிய இளைஞர் தினம், திருவள்ளுவர் தினம் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் விழா ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி ஒந்தனை மலைவாழ் உண்டுஉறைவிடப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த விழா வேளாளர் மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவரும் என்.சி.சி. ஒருங்கிணைப்பாளருமான மேஜர் கவிதா தலைமையிலும், யூத் ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத் தலைவர் ராஜா முன்னிலையிலும் நடைபெற்றது. ஒந்தனை மலைவாழ் உண்டு உறைவிடப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா பள்ளியின் தலைமை ஆசிரியை நிர்மலா தலைமையில் நடைபெற்றது.

விழாவில் ஆசிரியர் கோபால் வரவேற்புரை ஆற்றினார். தேசிய இளைஞர் தின சிறப்புரையை வனவர் சுப்ரமணியம் வழங்கினார். பின்னர் திருவள்ளுவர் தினத்தையொட்டி மேஜர் கவிதா சிறப்புரையாற்றினார். பொங்கல் தின சிறப்புரையை தலைமை ஆசிரியை. நிர்மலா வழங்கினார். ஒந்தனை பள்ளி ஆசிரியர் ரமேஷ், மேஜர் மோகன் ராவ், வனக்காப்பாளர் சீனிவாசன் மற்றும் ராஜசூர்யா வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர் மலைவாழ் மாணவிகளுடன் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடல் நடைபெற்றது. வேளாளர் கல்லூரி முன்னாள் மாணவிகள் பள்ளிக்கு கிரைண்டர் வழங்கினார்கள். என்.சி.சி. மாணவிகள் மலைவாழ் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பொங்கல் விழாவையொட்டி பள்ளி பொருட்கள் மற்றும் துணிவகைகளை வழங்கினார்கள்.

கல்லூரி மாணவிகள் மலைவாழ் பள்ளி மாணவியர்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கோலமிட்டு, கரும்பு வைத்து பொங்கல் விழா கொண்டாடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்கள். பின்னர் மலைவாழ் பள்ளி மாணவியர்களுடன் வேளாளர் மகளிர் கல்லூரி மாணவிகள் மதிய உணவு உண்டனர். நிறைவாக ராஜ்குமார் நன்றியுரை ஆற்றினார்.

இம்முகாமில் என்.சி.சி. கல்லூரி மாணவியர்கள், ஒந்தனை பள்ளி மாணவ - மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கான கொங்கு கிளை தலைவர் சந்திரா தங்கவேல், முதல்வர் ஜெயந்தி மற்றும் வேளாளர் மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் கவிதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!