பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்..!

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்..!
X

கொங்கு பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பெருந்துறை அருகே உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் மதநல்லிணக்கத்துடன் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா பல்வேறு போட்டிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொங்கல் வைத்தல், உறியடித்தல், கோலப் போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும், குழுவிற்கு 5 பேர் வீதம் மொத்தம் 200க்கும் மேற்பட்ட குழுக்கள் பொங்கல் வைத்தல் போட்டியில் பங்கேற்றனர். அதேபோல, 100க்கும் மேற்பட்ட குழுக்கள் கோலப் போட்டியில் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.20,000 மதிப்பிலான பரிசுத்தொகையினை கல்லூரியின் தாளாளர் இளங்கோ, கல்லூரியின் முதல்வர் பாலுசாமி ஆகியோர் வழங்கினர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் ழகரம் தமிழ் மன்றம் செய்திருந்தது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!