அந்தியூர் அடுத்த பர்கூரில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்

அந்தியூர் அடுத்த பர்கூரில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்
X

ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர் அடுத்த பர்கூரில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, மலைப்பகுதியின் சாலையில் சந்தேகத்தின் பேரில் நின்ற சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் மூட்டை, மூட்டையாக 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் அங்கு நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நசியனூர் சிந்தன்குட்டையை சேர்ந்த டிரைவர் பழனிச்சாமி (வயது 35), ஈரோட்டை சேர்ந்த முத்துசாமி (45), சுரேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்கள் பர்கூர் , சுண்டப்பூர் , தாமரைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கடத்த முயன்றது தெரியவந்தது.அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் பழனிச்சாமி , முத்துசாமி, சுரேஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து ஈரோடு மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!