அந்தியூர் அருகே நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற இருவர் தலைமறைவு

அந்தியூர் அருகே நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற இருவர் தலைமறைவு
X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற இருவரை காவல்துறையினர்தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் கிராமம் கழுதைபாலி ஜி.எஸ்.காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் (62). இவர் ஈரோட்டில் எலக்டீரிசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் நேற்று மாலை (செவ்வாய்க்கிழமை) தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்தியூர் அருகே உள்ள காந்திநகர் புதுக்காட்டை சேர்ந்த அண்ணாதுரை (27), மோகன்ராஜ் (26) ஆகிய இருவரும் மாணிக்கத்தின் தோட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது, மாணிக்கம் தோட்டத்து காவலுக்காக வளர்த்து வந்த நாயை அண்ணாத்துரை என்பவர் இந்த நாயை சுடு என்றதும், மோகன்ராஜ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் நாயை சுட்டார். இதில் படுகாயமடைந்த நாய் துடிதுடித்து உயிரிழந்தது. பின்னர், இதுகுறித்து மாணிக்கம் அந்தியூர் காவல்துறையில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அண்ணாதுரை தனது விவசாய தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வந்த நிலையில், கோழிகளை அடிக்கடி ஒரு நாய் பிடித்து சென்றதுள்ளது. இதுகுறித்து அண்ணாதுரை அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் மோகன்ராஜிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை மாணிக்கத்துக்கு சொந்தமான நாய் அண்ணாதுரையின் விவசாய தோட்டம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த நாய் தான் கோழிகளை பிடித்து சென்ற நாய் என்று கருதி மோகன்ராஜ் வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து அந்த நாயை சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, அண்ணாதுரை மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமறைவாகி விட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள். நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!