பெருந்துறையில் ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரி சார்பில் 'பிட் இந்தியா’ நடைபயணம்..!

பெருந்துறையில் ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரி சார்பில் பிட் இந்தியா’ நடைபயணம்..!
X

பெருந்துறையில் பிட் இந்தியா நடைபயணத்தை பெருந்துறை சரக துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபாலன், கல்லூரி முதல்வர் முனைவர் ராமன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரி சார்பில், பெருந்துறையில் பிட் இந்தியா’ நடைபயணம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரி சார்பில், பெருந்துறையில் 'பிட் இந்தியா’ நடைபயணம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் உடற் கல்வி துறை சார்பில் பெருந்துறையில் 'பிட் இந்தியா’ நடைபயணம் நடைபெற்றது. இதில் கல்லூரியின் சுமார் 150 மாணவ-மாணவிகள் கலந்து நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்நடைபயணத்தை பெருந்துறை சரக துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபாலன், கல்லூரி முதல்வர் முனைவர் ராமன் ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நம் அன்றாட வாழ்வில் நடைபயணம் மற்றும் உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல இந்நிகழ்வு உறுதுணையாக அமைந்தது. கல்லூரியின் சார்பில் பொது மக்களுக்கு உடற்பயிற்சி குறித்தான விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியானது, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலாளர் பிரியா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில், பேராசிரியர்களும் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business