அந்தியூர் அருகே காய்கறி கடையில் மது அருந்த அனுமதித்தவர் கைது

அந்தியூர் அருகே காய்கறி கடையில் மது அருந்த அனுமதித்தவர் கைது
X

பைல் படம்

அந்தியூர் அருகே காய்கறி கடையில் மது அருந்த அனுமதித்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரிலிருந்து பவானி செல்லும் சாலையில் உள்ள காய்கறி கடையில் சட்ட விரோதமாக மது அருந்த அனுமதிப்பதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத் தொடர்ந்து இன்று காலை அந்தியூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு கடையில் சோதனை செய்தனர்.அப்போது கடையில் சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். இதனையடுத்து, மது அருந்த அனுமதி அளித்த பவானி நல்லிபாளையத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 39) என்பவரை கைது செய்தனர்.அதன்பின், மகாலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!