அந்தியூர் அருகே ஆம்னி வேன் தீப்பற்றி எரிந்து சேதம்

அந்தியூர் அருகே ஆம்னி வேன் தீப்பற்றி எரிந்து சேதம்
X

தீப்பற்றி எரிந்து சேதமடைந்த ஆம்னி வேன்.

அந்தியூர் அருகே சிலிண்டரிலிருந்து ஆம்னி வேனுக்கு காஸ் நிரப்பும் போது ஏற்பட்ட தீ விபத்தில் ஆம்னி வேன் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

ஈரோடு மாவட்டம் பவானி மூன்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 60). விசைத்தறி தொழில் செய்து வருகின்றார். இந்த நிலையில் தயாரிக்கப்பட்ட துண்டுகளை அந்தியூரில் விற்பனைக்கு கொண்டு சென்று விட்டு ஒலகடம் வழியாக பவானி ரோடு நோக்கி ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒலகடம் பேரூராட்சி செல்லும் வீதியின் முன்பு ஆம்னி வேன் வந்த கொண்டிருந்த போது ஆம்னி வேன் எரிபொருள் இல்லாமல் நின்று விட்டது.

இதனையடுத்து வீட்டு சிலிண்டரை கொண்டு ஆம்னி வேனின் பேட்டரி உதவியுடன் சிலிண்டரில் இருந்து கியாஸ் நிரப்பிய போது மின் கசிவு ஏற்பட்டு ஆம்னி வேன் முழுவதும் தீப்பிடித்து. அப்போது அருகில் இருந்த ரங்கசாமி நாயக்கர் கார் தீப்பிடிப்பதை கண்டு அங்கிருந்து சிறிது தூரம் நகர்ந்து நின்றார். உடனடயாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தீயணைப்பு நிலைய வாகனம் வருவதற்குள் ஆம்னி வேன் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் ரங்கசாமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு