ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. அருகில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (நேற்று) நடந்தது.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கூடுதல் ஆணையருமான (வருவாய் நிருவாகம்) ஜி.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், சமத்துவபுர குடியிருப்புகள், குடிநீர் விநியோகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன், அம்ருத் 2.0, தூய்மை பாரத இயக்கம் 2.0, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் நிலுவையில் உள்ள பட்டாக்கள், வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் எண்ணும் எழுத்தும் இலக்கியம், பள்ளிக் கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், விலையில்லா பள்ளி உபகரணங்கள், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், இளவயதில் கருத்தரித்தல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், சிறப்பு திட்ட செயலாக்கம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுமைப்பெண் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பிலான திட்டங்கள், நெடுஞ்சாலைத் துறையின் சார்பிலான திட்டங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பிலான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையிலும் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாட்டிற்கு உறுதுணையாகவும் இருக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும் மற்றும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்திட வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மனிஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செல்வராஜன் (வளர்ச்சி), கணேஷ் (பொது), இணை இயக்குநர் (வேளாண்மை - உழவர் நலத்துறை) முருகேசன் (பொ), திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல், இணை இயக்குநர் (பொது சுகாதாரம்) அம்பிகா,துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) சோமசுந்தரம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உட்பட அனைத்துத் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu