ஈரோடு மாவட்டத்தில் 4 நாட்கள் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.
ஈரோடு மாவட்டத்தில் அடுத்த மாதம் 4 நாட்கள் வாக்காளர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் செய்தல் ஆகியவை ஆன்லைனில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அதே நேரம் வருகிற நவம்பர் மாதம் 4, 5ம் தேதி, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் சிறப்பு வாக்காளர் பட்டியல் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
952 வாக்குசாவடி அமைவிடங்களில் உள்ள 2,222 வாக்குசாவடி மையங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் அங்கு சென்று, பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், ஆதார் எண் பதிவு, திருத்தப் பணிகள் மேற்கொள்ளலாம். Voters helpline app என்ற செயலி மூலம் அல்லது, voters.eci.gov.in என்ற இணைய தளம் மூலமும், நேரிலும் வரும் டிசம்பர் 9ம் தேதி வரை பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தத்துக்கான படிவத்தை சமர்பிக்கலாம்.
டிசம்பர் 26ம் தேதிக்குள் அதிகாரிகள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, பட்டியலில் பெயர்களை சேர்க்கும் பணியை முடிக்க வேண்டும். அடுத்தாண்டு ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu