தாளவாடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கை அடக்கம் செய்து வழிபட்ட தூய்மை பணியாளர்..!
மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கை அடக்கம் செய்து வழிபட்ட தூய்மை பணியாளர் முருகன்.
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கின் உடலை தூய்மை பணியாளர் மீட்டு புதைத்து சடங்குகள் செய்து வழிபட்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியில் குரங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இந்த நிலையில், தொட்டகாஜனூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு உள்ள மின் கம்பத்தில் ஏறிய குரங்கு மின்சாரம் தாக்கி மின் கம்பத்தில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது.
இதுகுறித்து தாளவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய பணியாளர், மின் கம்பத்தில் ஏறி இறந்த குரங்கின் உடலை மீட்டார். இதையடுத்து ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் முருகன் குரங்கின் உடலை புதைத்து அதன் மீது மஞ்சள் தூவி, மாலை அணிவித்து சடங்குகள் செய்து வழிபட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வன உயிரினங்களை காப்பது நமது கடமை
வனஉயிர்கள் என்பவை பேணிப் பாதுகாக்க வேண்டிய சொத்தாகும். ஏனென்றால் அவை மனமகிழ்வு சூழ்நிலை, கல்வி, வரலாறு மற்றும் அறிவியல் அடிப்படையில் மதிப்புமிக்கதாகும். சூழ்நிலை சமநிலைக்கு வனஉயிரிகள் அவசியம். சுற்றுலாவிற்கு வனஉயிரிகளால் பெரிய முன்னேற்றம் ஏற்படும். ஏராளமான தாவரங்கள் மருத்துவ குணங்கள் மிக்க பொருட்களை அளிக்கின்றன. மரபுப் பொறியியலுக்குப் பயன்படும் மரபுப் பொருளுக்கான முக்கிய ஆதாரமாக வன உயிரிகள் விளங்குகின்றன. இந்தியா மித வெப்பநாடாக உள்ளதால், நாட்டின் பல பகுதிகளிலும் தாவரங்கள் வளர்ச்சிக்கு இவ்வெப்பம் உகந்ததாக உள்ளது.
சுயநலமிக்க சில சமூக விரோதிகள் இயற்கை வளத்தை சீர்குலைக்கின்றனர். இது காடுகளை அழித்தல் ஆகும். வன உயிரினங்கள் அழிதல், மழை அளவு குறைதல், தட்பவெப்பநிலை மாற்றம், மண் அரித்தல், பச்சை வீட்டு விளைவு (பூமிப்பந்து சூடாதல்) போன்றவைக் காடுகள் அழிவதால் நேரும் சில தீய விளைவுகளாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu