கொடுமுடி ரயில் நிலைய ஓய்வறையில் இறந்து கிடந்த மூதாட்டி

கொடுமுடி ரயில் நிலைய ஓய்வறையில் இறந்து கிடந்த மூதாட்டி
X
கொடுமுடி ரயில் நிலைய ஓய்வறையில் இறந்து கிடந்த மூதாட்டியில் சடலத்தை கைப்பற்றி, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கொடுமுடி ரயில் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடப்பதாக, ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பெருந்துறையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

இறந்த மூதாட்டி பெயர் செல்லம்மாள் என்பதும் அதே பகுதியில் கடந்த 15 வருடமாக சுற்றித் திரிந்து சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தவிர மூதாட்டி பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? முகவரி என்ன? போன்ற விவரம் தெரியவில்லை. இறந்த மூதாட்டி நீல நிற மஞ்சள் கோடு போட்ட சேலை அணிந்திருந்தார். வலது கையில் பச்சை குத்தி இருந்தார். இதுகுறித்து, ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers