காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
X

கொடுமுடி காவிரி ஆறு.

கொடுமுடி பகுதியில் உள்ள மக்கள் காவிரி ஆற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் சக்ககைபோடு போட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில் மேட்டூர் அணைகக்கும் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. அதனால் காவிரி ஆற்றில் தற்போது நாற்பதாயிரம் கன அடிக்கு மேலான நீர் சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் பவானிசாகர் அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது அந்த அணையில் 104 அடி நீர் நிரம்பியுள்ள நிலையில் எந்த நேரத்திலும் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படலாம் என்ற நிலை உள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விட்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயரவும், ஆற்றில் மீ்ன்பிடிக்கவோ, துணி துவைக்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் செல்லும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் காரணாம்பாளையம், ஊஞ்சலூர், கொடுமுடி உள்ளிட்ட ஊர்களில் வாழும் மக்கள் காவிரி ஆற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என கொடுமுடி வருவாய்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Tags

Next Story