கொடுமுடி அருகே காரும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

கொடுமுடி அருகே காரும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
X

கார் மற்றும் ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.

கொடுமுடி அருகே காரும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு முத்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (61) கார் டிரைவர். இவர் முத்தம்பாளையத்தில் இருந்து மதுரைக்கு மூன்று பேருடன் வாடகைக்கு சென்றுள்ளார். கொடுமுடி அருகே உள்ள கொம்பனைப்புதூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து ஈரோட்டிற்கு துணி ஏற்றி வந்த ஈச்சர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக காரின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கார் டிரைவர் விஸ்வநாதன் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் வந்த 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் போது விபத்து நடந்த காருக்குப் பின்னால் வந்த மற்றொரு காரும் விபத்து நடந்த காரின் பின் பகுதியில் மோதி லேசான விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கொடுமுடி போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரம் மார்க்கெட்டில் பருத்திக்கு உச்ச விலை!..ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம்!